1. அக்னி புஷ்பம் (09-01-1976 - மலையாளம்): கமல் முதல்முதலில் கன்னியாகுமரி என்ற மலையாளப் படத்தில்தான் தனி நாயகனாக நடித்தார். அதன் பிறகே தமிழில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மலையாளத்தில் அவர் நாயகனாக நடித்தப் படங்களில் ஒன்று அக்னி புஷ்பம். ஜெஸி இயக்கத்தில் ஜெயபாரதி நாயகியாக நடித்த இந்தப் படம் அப்படியே மூன்றாம் பிறை படத்தின் கதையை கொண்டது. இந்தப் படத்தை தழுவிதான் மூன்றாம் பிறை எடுக்கப்பட்டதாக ஒரு செய்தி உள்ளது.
2. உயர்ந்தவர்கள் (14-01-1997): இந்தி கோஷிஷ் படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை டி.என்.பாலு இயக்க கமல், சுஜாதா நடித்தனர். இதில் இவர்கள் இருவரும் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத் திறனாளிகளாக நடித்தனர். டூயட், சண்டைக்காட்சிகள் இல்லாமல் வெளியான இப்படம் பத்திரிகைகளின் பாராட்டைப் பெற்றது.
12. விருமாண்டி (14-01-2004): சண்டியர் என்று பெயர் வைத்ததால் எழுந்த எதிர்ப்பால் ஜல்லிக்கட்டு காட்சிகள் உள்பட பெரும்பாலான காட்சிகளை சென்னை கேம்பகோலா மைதானத்தில் அரங்கு அமைத்து எடுத்தனர். படம் 456 திரையரங்குகளில் உலக அளவில் வெளியானது. முதல்முறை 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியான தமிழ்ப் படம் விருமாண்டி. வார இறுதியில் 6 கோடி வசூலித்து சாதனைப் படைத்த படம் 100 நாள்களை கடந்து ஓடியது.