இளம் நடிகைகளில் ஒருவரான கல்யாணி பிரியதர்ஷன், ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறார். திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்ஸி ஆகியோரின் மூத்த மகள் தான் கல்யாணி. அவருக்கு சித்தார்த் என்ற தம்பி இருக்கிறார். இந்த ஆண்டு வெளியான ஹ்ரிதயம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். மலையாள படமான 'ப்ரோ டாடி' படத்தில் அண்ணா குரியனாகா நடித்தார் இந்த நேரத்தில் அவர் நாடகத்திலும் பயிற்சி பெற்றார். இந்தியா திரும்பிய அவர், பாண்டிச்சேரி ஆதிசக்தி தியேட்டரில் நடிப்பு பட்டறையில் பயின்றார். கல்யாணி தனது திரைப்பட வாழ்க்கையை 2013 ஆம் ஆண்டில் கலை இயக்குநர் சாபு சிரிலின் கீழ், உதவி தயாரிப்பு வடிவமைப்பாளராக கிரிஷ் 3 திரைப்படத்தில் தொடங்கினார். தற்போது இளைஞர்களுக்குப் பிடித்த நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். 2016-ல் இருமுகன் என்ற தமிழ் திரைப்படத்தில் உதவி கலை இயக்குநராக பணியாற்றினார். அதற்கடுத்த ஆண்டில், ஹலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து ‘ஹீரோ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கல்யாணி, பின்பு சிம்புவின் மாநாடு படத்தில் நடித்தார்.