இளம் நடிகைகளில் ஒருவரான கல்யாணி பிரியதர்ஷன், ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கிறார்.
2/ 12
நியூயார்க் நகரத்தின் பார்சன்ஸ் ஸ்கூல் ஆஃப் டிசைனில் கட்டிடக்கலை வடிவமைப்பில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.
3/ 12
திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸ்ஸி ஆகியோரின் மூத்த மகள் தான் கல்யாணி. அவருக்கு சித்தார்த் என்ற தம்பி இருக்கிறார்.
4/ 12
அவர் தனது ஆரம்பகால பள்ளிப்படிப்பை சென்னை லேடி ஆண்டாள் பள்ளியில் படித்தார். பின்னர் சிங்கப்பூரில் மேற்படிப்புக்கு சென்ற அவர், அங்கு நாடகக் குழுக்களிலும் பணியாற்றினார்.
5/ 12
இந்தியா திரும்பிய அவர், பாண்டிச்சேரி ஆதிசக்தி தியேட்டரில் நடிப்பு பட்டறையில் கலந்து கொண்டார்
6/ 12
கல்யாணி தனது திரைப்பட வாழ்க்கையை 2013 ஆம் ஆண்டில் கலை இயக்குநர் சாபு சிரிலின் கீழ், உதவி தயாரிப்பு வடிவமைப்பாளராக கிரிஷ் 3 திரைப்படத்தில் தொடங்கினார்
7/ 12
2016-ல் இருமுகன் என்ற தமிழ் திரைப்படத்தில் உதவி கலை இயக்குநராக பணியாற்றினார்.
8/ 12
அதற்கடுத்த ஆண்டில், ஹலோ என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
9/ 12
இதையடுத்து ‘ஹீரோ’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கல்யாணி, பின்பு சிம்புவின் மாநாடு படத்தில் நடித்தார்
10/ 12
இந்த ஆண்டு வெளியான ஹ்ரிதயம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
11/ 12
மலையாள படமான 'ப்ரோ டாடி' படத்தில் அண்ணா குரியனாகா நடித்தார்
12/ 12
தற்போது இளைஞர்களுக்குப் பிடித்த நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.