நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார். காஜல் அகர்வால் 2020 ஆம் ஆண்டு கவுதம் கிச்சலு என்பவரை பெற்றோர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டார். கர்ப்பமாக இருந்த காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு நீல் என்று பெயர் வைத்தனர். கர்ப்பகாலத்தின் போது பல போட்டோ ஷூட்களை காஜல் அகர்வால் நடத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்நிலையில் குழந்தை பிறந்த பின்பும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தந்தையர் தினத்திற்கு கவுதம் கிச்சலு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தந்தை தின வாழ்த்து கூறியிருந்தார் காஜல். தனது குழந்தையை கொஞ்சும் காஜலின் புகைப்படம். என் வாழ்க்கையிலே காதலே நீ தான் ! என்று இந்த புகைப்படத்திற்கு கீழே பதிவிட்டுள்ளார் காஜல்.