நடிகை காஜல் அகர்வால் தனது லேட்டஸ்ட் படங்களை இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் காஜல் அகர்வால். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு நீல் எனப் பெயரிட்டனர் காஜல் - கெளதம் தம்பதி. பிரசவத்திற்குப் பிறகு குழந்தையுடன் நேரம் செலவிட்டு வந்த காஜல், அந்த படங்களையும் இணையத்தில் பகிர்ந்துக் கொண்டார். தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்த நிலையில் வித விதமான ஃபோட்டோஷூட்கள் நடத்தி அந்தப் படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்து வருகிறார்.