இந்த குழந்தை விஜய், அஜித்துடன் நடித்த காஜல் அகர்வால் தான்! தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் காஜல் அகர்வால். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு நீல் எனப் பெயரிட்டனர் காஜல் - கெளதம் தம்பதி. பிரசவத்திற்குப் பிறகு குழந்தையுடன் நேரம் செலவிட்டு வந்த காஜல், அந்த படங்களையும் இணையத்தில் பகிர்ந்துக் கொண்டார். காஜல் அகர்வாலுக்கு நிஷா அகர்வால் என்ற தங்கையும் உள்ளார். அவர்கள் இருவரும் சிறுவயது முதல் இப்போது வரை அழகான பிணைப்பை கொண்டிருக்கின்றனர். காஜல் அகர்வால் குழந்தைப்பருவ படம்.