ஜான்வி கபூர் சமீபத்தில் ஒரு நேர்காணலில், தென்னிந்திய திரைப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் விஜய் சேதுபதி மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக ஜான்வி தெரிவித்ததோடு, நானும் ரவுடி தான் படத்தைப் பார்த்துவிட்டு விஜய் சேதுபதிக்கு போன் செய்தேன் எனக்கூறியுள்ளார்.
விஜய்சேதுபதி அதற்கு என்ன சொன்னார் என்பது குறித்து ஜான்வியிடம் கேட்டபோது, “அவர் ‘ஐயோ, ஐயோ’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அவர் மறுத்தாரா அல்லது வெட்கப்பட்டாரா என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஆர்வமாக இருந்ததால் அவர் ஆச்சரியப்பட்டார், அவர் அதிர்ச்சியடைந்தார் என்று நினைக்கிறேன்,” என கூறியுள்ளார் .இந்த வீடியோ வைரலாகி வருகிறது.