நேற்று ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்ரி விழாவில் நடிகை சமந்தா, காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட முன்னணி நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.
2/ 7
கோவை ஈஷா யோகா மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் விமரிசையாக மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். நேற்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு, சத்குரு முன்னிலையில் இந்த ஆண்டின் மகா சிவராத்திரி விழா ஈஷா யோகா மையத்தில் நடைபெற்றது.
3/ 7
பஞ்சபூத ஆராதனை, லிங்க பைரைவி மகா ஆரத்தி, சத்குரு ஜக்கி வாசுதேவின் சொற்பொழிவு ஷம்போ தியானம், பிரம்மா முகூர்த்த மந்திரம் என பல்வேறு ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்றன. விடிய விடிய பிரபல கலைஞர்களின் இசை, நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
4/ 7
இந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் இருப்பதால், ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்த குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டுமே நேரடியாக விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
5/ 7
நடிகை காஜல் அகர்வால் தனது கணவர் கௌதம் கிச்லு உடன் கலந்து கொண்டார். மேலும் நடிகை சமந்தா, ரகுல் ப்ரீத் சிங், லட்சுமி மஞ்சு சமந்தாவின் தோழி ஷில்பா ரெட்டி உள்ளிட்டோரும் சிவராத்திரி விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
6/ 7
ஆதி யோகி சிலை முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட சமந்தா அவரது தோழி ஷில்பா ரெட்டி, ரகுல் ப்ரீத் சிங், லட்சுமி மஞ்சு.
7/ 7
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத அனைவரும் வீட்டில் இருந்தபடியே சிவராத்திரி விழாவை கண்டுகளிக்கும் வகையில், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மாநில மொழிகளில் முன்னணி தொலைக்காட்சிகள் மற்றும் யூடியூப் சேனல்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.