இசைஞானி இளையராஜாவும், உலக நாயகன் கமல் ஹாசனும் உடன்பிறவா சகோதரர்கள் என்பது திரையுலகில் அனைவருக்கும் தெரியும். கமல் ஹாசனில் பல படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தன் வாழ்க்கையின் முக்கிய விஷயங்கள் குறித்து முதலில் ஒரு அண்ணனாக இளையராஜாவிடம் தான் பகிர்ந்துக் கொள்வேன் கமல் ஹாசன் பல தருணங்களில் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று இளையராஜாவும், கமல் ஹாசனும் கே.ஜி.எஃப் 2 படத்தை பார்த்து ரசித்தனர். இதற்காக பட தயாரிப்பு படத்தயாரிப்பு நிறுவனம் பிரத்தியேகமாக திரையரங்கை ஏற்பாடு செய்திருந்தது. கே.ஜி.எஃப் 2 படத்தைப் பார்க்க வந்த இளையராஜாவுக்கும் கமல் ஹாசனுக்கும் பூங்கொத்து கொடுக்கப்பட்டது. படத்தைப் பார்த்த இருவரும் குழுவினரை வெகுவாக பாராட்டியதாகக் கூறப்படுகிறது.