முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » விஜய்யின் லியோ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்?

விஜய்யின் லியோ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

  • News18
  • 17

    விஜய்யின் லியோ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்?

    தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவரது நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு படம் வெளியானது. இதை அடுத்து மாநகரம், கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இரண்டாவது முறையாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 27

    விஜய்யின் லியோ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்?

    இந்த படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 37

    விஜய்யின் லியோ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்?

    இந்தப் படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் கடந்த மாதம் நிறைவுபெற்றது. இதனையடுத்து லியோ குறித்த தங்கள் அனுபவங்களை படக்குழுவினர் பகிரும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. இந்த வீடியோவில் மழை உள்ளிட்ட எந்த சவாலான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் படப்பிடிப்பு நடைபெற்றதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

    MORE
    GALLERIES

  • 47

    விஜய்யின் லியோ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்?

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பணியாற்றும் வேகத்தைப் பார்த்து தாங்களும் உத்வேகத்துடன் பணியாற்றியதாகவும்அவர்கள் தெரிவித்தனர். காஷ்மீரில் இந்த காலநிலையில் பணியாற்றுவது கடினம் எனவும் இந்த சூழ்நிலையை தமிழ் கலைஞர்கள் அதனை மிக எளிதாக கையாண்டதாகவும் தெரிவித்தார்கள். 31 நாட்களாக மழை, பனிப்பொழிவு என எதையும் பொருட்படுத்தாது படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 57

    விஜய்யின் லியோ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்?

    இந்நிலையில் லியோ படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இணைந்துள்ளதகாக தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. மலையாளத்தின் பிரதான நடிகராக வலம் வருபவர் 'ஜோஜூ ஜார்ஜ்.

    MORE
    GALLERIES

  • 67

    விஜய்யின் லியோ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்?

    'ஜோசப்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜெகமே தந்திரம்' படத்தில் நடித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 77

    விஜய்யின் லியோ படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்?

    சமீபத்தில், இரட்டா என்ற மலையாளப்படத்தில் இரட்டை வேடங்களில் ஹீரோவாக நடித்து இப்படத்தை தயாரித்தும் வழங்கினார். க்ரைம் த்ரில்லர் படமான இதனை ரோஹித் எம்.ஜி கிருஷ்ணன் என்ற புதிய இயக்குனர், டைரக்டு செய்தார். படம், கடந்த 3-ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களையே பெற்றது குறிப்பிடத்தக்கது.

    MORE
    GALLERIES