எஸ்.பி.முத்துராமன் ஏவிஎம்மின் ஆஸ்தான் இயக்குனர் என்பது திரையுலகம் அறிந்த விஷயம். வருடத்துக்கு ஒரு படமாவது ஏவிஎம் தயாரிப்பில் இயக்குவார். 1986 இல் அவரது இயக்கத்தில் மிஸ்டர் பாரத் வெளியானது. அதே வருடம் ஏவிஎம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம் பெரும் வெற்றியை பெற்றதுடன் தேசிய விருதுகளையும் அள்ளியது.
எஸ்.பி.முத்துராமன் ஏவிஎம்மின் ஆஸ்தான் இயக்குநர் என்பது திரையுலகம் அறிந்த விஷயம். வருடத்துக்கு ஒரு படமாவது ஏவிஎம் தயாரிப்பில் இயக்குவார். 1986 இல் அவரது இயக்கத்தில் மிஸ்டர் பாரத் வெளியானது. அதே வருடம் ஏவிஎம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம் பெரும் வெற்றியை பெற்றதுடன் தேசிய விருதுகளையும் அள்ளியது.
இந்த வருடம் மேலும் இரு படங்களை ஏவிஎம் தயாரித்தது. ஒன்று, சிவாஜி, நதியா நடித்த அன்புள்ள அப்பா. ஏ.சி.திருலோகசந்தர் இயக்கிய அன்புள்ள அப்பா வெற்றி பெற்றது. இன்னொன்று சங்கர் குரு. மற்றப் படங்களை அனுபவமிக்க இயக்குனர்கள் இயக்க, சங்கர் குருவை இயக்கும் பொறுப்பை அறிமுக இயக்குனர் எல்.ராஜாவிடம் ஏவிஎம் அளித்தது. அதுவரை ஏவிஎம் படங்களில் நடித்திராத அர்ஜுன் நாயகனாக நடித்தது இன்னொரு முக்கியமான அம்சம்.
சங்கர் குரு எஸ்.பி.முத்துராமன், இராம.நாராயணன் கலவையாக உருவானது. ஒருபுறம் அண்டவர் கவர் காப்பாக ரவுடிகளை துவசம் செய்து கொண்டிருப்பார் இன்ஸ்பெக்டரான அர்ஜுன். வில்லன் சொந்தாமரை செய்யும் கொலையைப் பார்க்கும் பேபி ஷாலினி தனது குரங்குடன் அனாதையாக அலைந்து கொண்டிருப்பார். இறுதியில் அர்ஜுனிடம் அவர் அடைக்கலமாவார்.
அதையடுத்து எல்.ராஜா, அர்ஜுன் காம்பினேஷனில் ஏவிஎம் தயாரித்த சொந்தக்காரனும் வசூல்ரீதியாக வெற்றி பெற்றது. எல்.ராஜா கார்த்திக்கை வைத்து காளிச்சரண், ரகுவரனை வைத்து குற்றவாளி, தூள் பறக்குது போன்ற படங்களையும் எடுத்தார். ஆனால், அவை எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. மொத்தம் 9 படங்களுடன் எல்.ராஜா திரையுலகிலிருந்து வெளியேறினார். இதில் ஆறு படங்கள் அர்ஜுன் நடித்தவை.