1995 இல் வெளியான ரஜினியின் பாட்ஷா திரைப்படம் அனைத்து சென்டர்களிலும் அமோக வரவேற்புடன் ஓடியது. மாணிக்கம் என்ற சாதாரண ஆட்டோ டிரைவர், பாட்ஷா என்கிற முன்னாள் டான் என்பதை ஒரு மலர் மலர்வதைப் போன்று திரைக்கதையில் வெளிப்படுத்தியிருந்தார்கள் பாலகுமாரனும், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவும். ரஜினி நடித்த ஹம் இந்தித் திரைப்படத்தின் ஒரு காட்சியை விரித்து எழுதப்பட்டதே பாட்ஷா கதை.
ஹிந்துஸ்தானி என இந்தியில் வெளியாகி அங்கும் சாதனை படைத்தது. இந்தப் படம் வெளியான போது, இந்தியில் அதிகம் வசூலித்த தமிழ் டப்பிங் திரைப்படமாக இந்தியன் இருந்தது. பாட்ஷா போன்ற ஹிட் இனி எப்போது அமையும் என்று நினைத்தவேளை, அடுத்த வருடமே பாட்ஷாவை தாண்டி வசூலித்து புதிய இன்டஸ்ட்ரி ஹிட் சாதனையை இந்தியன் படைத்தது.