முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » கடுவா முதல் அயோத்தி வரை... தமிழில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் ஒரு லிஸ்ட்!

கடுவா முதல் அயோத்தி வரை... தமிழில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் ஒரு லிஸ்ட்!

தமிழில் இந்த வாரம் பிரபு தேவா நடிப்பில் பஹிரா, சசிகுமார் நடிப்பில் அயோத்தி உள்ளிட்ட 6 படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

  • News18
  • 16

    கடுவா முதல் அயோத்தி வரை... தமிழில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் ஒரு லிஸ்ட்!

    ‘மை டீயர் பூதம்’, ‘பொய்க்கால் குதிரை’ படங்களைத்தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பஹிரா’. இந்தப் படத்தை ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, ‘ஏஏஏ’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்தில் பிரபு தேவா 10-க்கும் மேற்பட்ட கெட்டப்களில் நடித்துள்ளார். இப்படத்தில் அமைரா தஸ்தூர், சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, சாக்‌ஷி அகர்வால், ஜனனி, காயத்ரி என 6 ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இப்படம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 26

    கடுவா முதல் அயோத்தி வரை... தமிழில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் ஒரு லிஸ்ட்!

    ‘காரி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் சசிகுமார் நடிக்கும் படம் ‘அயோத்தி’. இந்தப்படத்தை மந்திரமூர்த்தி இயக்கியுள்ளார். ட்ரைன் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தில் யஷ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ரானி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம்  3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 36

    கடுவா முதல் அயோத்தி வரை... தமிழில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் ஒரு லிஸ்ட்!

    திருச்சிற்றம்பலம் படத்தின்  வெற்றிக்கு பிறகு இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியள்ள படம் அரியவன். இந்தப் படத்தில் இஷான் ஹீரோவாக அறிமுகமாக டேனியல் பாலாஜி, சத்யன் உள்ளிட்டோ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    கடுவா முதல் அயோத்தி வரை... தமிழில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் ஒரு லிஸ்ட்!

    கடந்த ஆண்டு ஜூலை மாதம் மலையாளத்தில் வெளியான படம் கடுவா. பிருத்விராஜின் நடிப்பில் உருவான இந்த படத்தை இயக்குநர் ஷாஜி கைலாஸ் இயக்கிய இந்தப் படத்தில் சம்யுக்தா நாயகியாக நடித்திருந்தார். ஆக்‌ஷன் த்ரில்லராக உருவாகியிருந்த இந்தப் படம் நல்ல வரவேற்பினை பெற்றது. தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து படக்குழு தமிழில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    கடுவா முதல் அயோத்தி வரை... தமிழில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் ஒரு லிஸ்ட்!

    அஞ்சும் குரேஷி, சாஜித் குரேஷி தயாரிப்பில், இயக்குநர் ஹர்ஷ் வர்தன் இயக்கத்தில், நடிகை ரித்திகா சிங் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “இன் கார்”. இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் வெளியாகிறது. தமிழில் ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை வெளியிடுகிறார்.  இந்தப் படம் மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    கடுவா முதல் அயோத்தி வரை... தமிழில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள படங்கள் ஒரு லிஸ்ட்!

    இயக்குனர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ் நடித்துள்ள படம் பல்லு படாம பாத்துக்க. இந்தப் படத்தில் சஞ்சிதா ஷெட்டி, ஷாரா, மொட்ட ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட பிரபலங்கள் நடித்திருக்கும் நகைச்சுவை மற்றும் அடல்ட் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். இந்தப் படம் மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    MORE
    GALLERIES