இந்தியாவில் சினிமா புகழை வைத்து தனிக்கட்சி தொடங்கி குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்தவர் என்ற பெருமை என்டி ராமராவுக்கு உண்டு. எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்குவதற்கு முன் திமுகவின் முக்கிய நபராக இருந்தார். என்டிஆருக்கு அப்படியான முன் அனுபவங்கள் இல்லை. கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே அவர் ஆட்சியைப் பிடிக்க, சினிமாவில் அவர் உருவாக்கி வைத்திருந்த இமேஜ் முக்கிய காரணம்.
பாதாள பைரவி படப்பிடிப்பு நடக்கையில், என்டிஆர் அதிகாலையே வந்து கத்திச் சண்டை, குதிரையேற்றம் என பயிற்சி மேற்கொள்வார். விஜயா புரொடக்ஷனில் அப்போது இரண்டு இட்லி, ஒரு வடை காலை டிபனாக தரப்படும். அத்துடன் ஒரு தோசை அல்லது, பொங்கல் அல்லது பூரி இவற்றில் ஏதாவது ஒன்றும் கிடைக்கும். பயிற்சி முடித்து வரும் என்டிஆரின் பசியை இந்த இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு தோசை டிபனால் போக்க முடியவில்லை.
பாதாள பைரவி தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுக்கப்பட்டது. தெலுங்குப் பதிப்பு 1951 மார்ச் 15 ஆம் தேதியும், தமிழ் பதிப்பு மே 17 ஆம் தேதியும் வெளியானது. இரு மொழிகளிலும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கில் தொடர்ந்து 200 நாள்கள் ஓடிய முதல் படம் என்ற சாதனையையும் படைத்தது. என்டி ராமராவ், எஸ்வி ரங்காராவ் என்ற இரு நடிகர்களுக்கு இந்தப் படமே திருப்புமுனையாக அமைந்தது.
பாதாள பைரவியில் என்டி ராமராவ் நாயகன். ஆனாலும், அவருக்கு படயூனிட்டில் அனைவருக்கும் வழங்கப்படும் உணவுதான் வழங்கப்பட்டது. ஆனால், இன்று, முதல் படத்திலேயே சோறு ஓரிடம், பொரியல் ஓரிடம், சிக்கன் ஓரிடம் என்று ஒருவேளை உணவுக்கு என்பது ஸ்டார் ஹோட்டல்களில் இருந்து உணவு தருவிக்கிறார்கள். தயாரிப்புச் செலவு எகிறாமல் என்ன செய்யும்?