1983 இல் பாலுமகேந்திரா வசந்தமே வருக என்ற படத்தை இயக்கினார். வழக்கம்போல் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இயக்கம் அனைத்தும் அவரே. சுமன், அர்ச்சனா, கிட்டி, பிரதீப் சக்தி, ரகுவரன், கௌதமி ஆகியோர் நடித்தனர். படம் வெளியாகி எந்தக் கவனமும் பெறாமல் காணாமல் போனது. பாலுமகேந்திரா வசந்தமே வருக என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது அவரது ரசிகர்களிலேயே பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.
இதனிடையில் கிராமத்துக்கு படப்பிடிப்புக்கு செல்லும் இயக்குனர் ரகுவரன் அங்குள்ள அப்பாவிப் பெண் கௌதமின் அழகில் கவரப்படுவார். என்னுடைய சினிமாவில் நடிக்கிறியா? என்ற அவரது ஆசை வார்த்தையால் உந்தப்பட்டு, பட்டணத்துக்கு வண்டியேறுவார் கௌதமி. அங்கு யாரையும் தெரியாமல் அழுது கொண்டிருக்கும் கௌதமிக்கு அர்ச்சனா அடைக்கலம் தருவார்.
சுமன் அர்ச்சனாவை வெளியூர் அனுப்பி வைப்பார். அங்கு ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொண்டு, கிட்டியுடன் நெருக்கமாக பழகுவார். எப்படியும் அவரை அம்பலப்படுத்த வேண்டும் என்பது திட்டம். ஆனால், அதற்குள் அவர் யார் என்பதை கிட்டி அறிந்து கொள்வார். வேஷம் மாறிய அர்ச்சனாவை தனது ஆள்களை வைத்து கடத்துவார். இறுதியில் சுமன் அவரை காப்பாற்றுவார்.
ஜானி படப்பாடலை எஸ்.பி.சைலஜா பாடியிருப்பார். இதில் எஸ்.ஜானகி. அதில் வரிகள், ஆசையை காத்துல தூதுவிட்டு என்று இருந்தால் இதில், ராத்திரி உனக்கென ஆடட்டுமா என எழுதப்பட்டிருக்கும். வரிகளும், இசையும் வேறு. ஆனால், டியூன் அச்சு அசலாக அதேதான். ஒரே டியூனில் அமைந்த இந்த இரு பாடல்களில் முதலாவது, எவர்கிரீன் பாடலாக இன்றும் கேட்கப்படுகிறது. இரண்டாவது பாடல், யாராலும் கேட்கப்படாமல் கிட்டத்தட்ட மறக்கப்பட்டே விட்டது.
வசந்தமே வருக படத்தில் தெலுங்கு நடிகை ஜெயலலிதர் சின்ன வேடம் ஒன்றில் நடித்திருந்தார். அவரது பெயர் டைட்டிலில் வரும். டிஸ்கோ சாந்தி ஒரேயொரு கவர்ச்சி நடனத்துக்கு ஆடியிருந்தார். அவர் பெயரும் டைட்டிலில் இடம்பெற்றது. ஆனால், மௌனிகாவின் பெயரை டைட்டிலில் தவிர்த்திருந்தனர். மலையாள த்ரில்லர் படங்கள் தந்த உத்வேகத்தில் பாலுமகேந்திரா இயக்கிய படம் இது. ஆனால், மலையாளப் படங்களின் தரத்தை வசந்தமே வருக எட்டவில்லை.