திருமணம் நடந்த அன்றும் தன்னை உருவ கேலி செய்ததாக நடிகை மஞ்சிமா மோகன் கூறியுள்ளார். மலையாளத்தில் 4 வயது முதலே குழந்தை நட்சத்திர கேரக்டரில் நடிகை மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்த அவர் 2016-ல் கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். தேவராட்டம் படத்தில் மஞ்சிமாவும், கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடித்தனர். இந்த படத்தின் ஷூட்டிங்கின்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இருவரும் திருமணம் முடித்துக் கொண்டார்கள். மஞ்சிமாவின் உடல் எடை அதிகரித்திருப்பதை சமூக வலைதளங்களில் சிலர் கிண்டல் செய்து பதிவிட்டிருந்தனர். இதுபற்றி, மஞ்சிமா மோகன் அளித்த பேட்டியில், சோஷியல் மீடியாவில் மட்டுமல்ல, திருமணத்தின்போதும் என்னை உருவ கேலி செய்தார்கள். அதனை நான் பொருட்படுத்தவில்லை. இந்த எடையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தேவை ஏற்பட்டால் என்னால் குறைக்க முடியும் என்று கூறியுள்ளார்.