அப்போது பேசிய அவர், ''அசெம்ப்ளி ரூம்ஸ் கமர்ஷியல் சினிமா தியேட்டர் இல்ல. 1923 ஆம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் கவர்னராக இருந்த வில்லிங்டன் மற்றும் அவரது மனைவியும் இந்த அசெம்ப்ளி ரூம்ஸ் தியேட்டரை கலை நிகழ்வுகளை நடத்துவதற்காக உருவாக்கினார்கள். இதற்காக டிரஸ்ட் ஒன்றை துவங்கி அதனை ஊட்டி மக்களுக்காக வழங்கினாங்க.
இங்கே ஜெர்மன் தயாரிப்பான அனலாக் புரொஜெக்டர் மூலம் 1954 முதல் 2015 வரை படங்கள் திரையிடப்பட்டது. உலக அளவில் ஃபிலிம் ரீல் தயாரிப்புகள் நிறுத்தப்பட்ட பிறகு எல்லோரும் டிஜிட்டலுக்கு மாறிட்டாங்க. அதனால் இந்த புரொஜக்டர் இங்கு பயன்படுத்தப்படவில்லை. இப்போ இங்கே 2டி டிஜிட்டல் புரொஜக்சன் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது.