இந்த நிலையில் தோனி எண்டர்டெயின்மென்ட் சார்பில் படங்களைத் தயாரிக்க அவர் திட்டமிட்டிருக்கிறார். தமிழில் தோனி தயாரிக்கும் முதல் படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார். இவர் தோனியை ஹீரோவாக வைத்து 'அதர்வா தி ஆர்ஜின்' என்ற கிராஃபிக் நாவலை தயாரித்தவர். தோனியின் மனைவி சாக்ஷி சொன்ன ஒன் லைனை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகவிருப்பதாக கூறப்படுகிறது.