2. பிந்து (ஈகா - தெலுங்கு) சமந்தாவின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படங்களில் முக்கியமானது. நானியை காதலிக்கும் துறுதுறு பிந்துவாக இதில் நடித்தார். நானியின் மரணத்துக்குப் பின் சோகம், நானியின் கொலைக்கு காரணமான வில்லனை பழிவாங்க காட்டிய வேகம் என ஒரே படத்தில் பல்வேறு உணர்ச்சிகளை காட்டிய கதாபாத்திரம்
4. தாரா (மெர்சல் - தமிழ்) மற்ற படங்களுடன் ஒப்பிடுகையில் மெர்சலில் சமந்தாவின் தாரா கதாபாத்திரம் வழக்கமான ஒன்று தான். எனினும் விஜய்யை யார் என்று தெரியாமல், தம்பி உன்னைத்தான் வாடா என்று அழைத்து, ரோஸ் மில்க் வாங்கித் தர்றேன்டா என காரியம் சாதிக்கப் பார்க்கும் தாரா, செம்ம க்யூட். இந்த ஒரு காட்சியே ரசிகர்கள் தாராவை மறக்காமல் இருக்க போதுமானது.
5. ராமலக்ஷ்மி (ரங்கஸ்தலம் - தெலுங்கு) சமந்தாவை மாடர்ன் பெண்ணாக மட்டும் பார்த்து வந்த நிலையில் பாவாடை தாவணியில் புழுதி படிந்த கிராமத்துப் பெண்ணாக காட்டிய படம் ரங்கஸ்தலம். இதில் அவர் ஏற்று நடித்த ராமலக்ஷ்மி கதாபாத்திரம் இதற்கு முன் சமந்தா செய்யாதது. ரங்கஸ்தலத்துக்குப் பிறகு அவருக்கு அப்படியொரு கதாபாத்திரம் கிடைக்கவுமில்லை.
6. ரக்சனா (யு டர்ன் - தெலுங்கு) பவன் குமாரின் இந்தப் படத்தில் டைம்ஸ் ஆஃப் இன்டியாவில் இன்டர்னாக இருக்கும் ரக்சனா என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடித்தார். வித்தியாசமான வழக்கொன்றை அவர் துப்பறிந்து அதன் பின்னாலுள்ள ரகசியத்தை வெளிக்கொணரும் கதை. கிட்டத்தட்ட புலன்விசாரணை செய்யும் கதாபாத்திரம். கச்சிதமாக அதனை செய்திருந்தார்.
7. வேம்பு (சூப்பர் டீலக்ஸ் - தமிழ்) சூப்பர் டீலக்ஸில் முன்னாள் காதலன் வீட்டிற்கு வந்திருக்கையில், அவனுடன் உறவு கொண்டதையும், அந்த வேலையில் இருக்கும் போதே அவன் இறந்து போனதையும் வேம்பு விவரிக்கிற தொனியிலேயே வேம்பு கதாபாத்திரம் அழியா வரம் பெற்றது. குழந்தைத்தனமான முகத்தை வைத்துக் கொண்டு கனமான வேடத்தையும் செய்ய முடியும் என்பதை உணர்த்திய படம்.
9. ஜானகி (ஜானு - தெலுங்கு) பொதுவாக உணர்வு ரீதியான படத்தை வேறு மொழியில் ரீமேக் செய்கையில் காமெடியாகிவிடும். பிரேமத்தை தெலுங்கில் ரீமேக் செய்த போது அப்படித்தான் ஆனது. ஆனால், 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு வெற்றி பெற்றதற்கு ஜானகியாக நடித்த சமந்தா முக்கிய காரணம். தமிழ் ஜானகியைப் போலவே இந்தத் தெலுங்கு ஜானகியும் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்தார்.
10. ராஜி என்கிற ராஜலட்சுமி (தி பேமிலி மேன் சீஸன் 2 - இந்தி வெப் தொடர்) இந்த வெப் தொடரில் ராஜி என்கிற ஈழப்போராளியாக சமந்தா நடித்தார். மனம் நிறைய பகையும், பழிவாங்கும் உணர்வும், அதற்காக எதையும் துறக்கிற தியாகமும் நிரம்பிய கதாபாத்திரம். ஒரே தொடரில் இந்தி பேசும் மக்களின் மனங்களை சமந்தா ஆக்கிரமிக்க இந்த கதாபாத்திரம் உதவியது.