புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் விக்ரம் வேதா. ஆக்ஷன் கதையாக உருவான இந்த படத்தில் மாதவன் போலீசாக விக்ரம் என்ற கதாப்பாத்திரத்திலும் வேதா என்ற கேங்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். இந்த படம் வெளியான நேரத்தில் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
குத்துச் சண்டை விளையாட்டை மையமாக வைத்து சுதா கொங்கரா எழுதி இயக்கிய ஒரு திரைப்படம் இறுதிச்சுற்று. 2016 ஆம் ஆண்டில் தமிழ், இந்தி ஆகிய இருமொழிகளிலும் வெளியான இப்படம் மாதவனின் திரைப் பயணத்தில் ஒரு கம்பேக்காகவே பார்க்கப்பட்டது. குத்துச்சண்டை பயிற்சியாளராக முன்னணி கதாபாத்திரத்தில் மாதவன் இப்படத்தில் நடித்துள்ளார்.