ராக்கெட்ரி : தி நம்பி எபெக்ட் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கேன்ஸ் 2022 இல் திரையிடப்பட்ட இந்தப் படம், முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும், விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணனின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கிறார். இந்த படம் இந்த வருடம் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. இந்த படம் மாதவன் முதன்முறையாக எழுதி, இயக்கியிருக்கும் முதல் படம் என்பது குறிப்பிடதக்கது.
தோகா ரவுண்ட் தி கார்னர் என்ற இந்த படத்தி குக்கி வி. குலாட்டி இயக்கியுள்ளார். ஸ்பென்ஸ் த்ரில்லரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் இந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று எதிர்பர்க்கப்படுகின்றது. மேலும் இப்படத்தில் மாதவனுடன், அபர்சக்தி குரானா, தர்ஷன் குமார் ஆகியோர் மற்றும் புதுமுகமாக குஷாலி குமாரும் நடித்துள்ளார்.