அண்ணனின் ரீமேக் படங்களில் நடித்த ரவி, 'தீபாவளி' படத்தில் வட சென்னை இளைஞராகவும், மறைந்த இயக்குநர் - ஒளிப்பதிவாளர் ஜீவாவின் கடைசித் திரைப்படமான 'தாம் தூம்' படத்தில் காதல், ஆக்ஷனுக்கு முக்கியத்துவமுள்ள கதாபாத்திரத்திலும், எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'பேராண்மை' படத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராணுவ வனப் பாதுகாவலராக முதிர்ச்சியான நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார். தற்போது பொன்னியின் செல்வனின் அருள்மொழி வர்மனாக வரவிருக்கிறார்.