இந்த நிலையில் நடிகை சுனைனா ஐந்து நாட்களுக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சிஎஸ்கே, கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியயை தனது தோழிகளுடன் கண்டுகளித்த புகைப்படம் மற்றும் வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதன் பிறகு அவரது சமூக வலைதளத்தில் எந்தவித பதிவும் போடவில்லை. இந்த நிலையில் நடிகை சுனைனாவைக் காணவில்லை என்கிற வீடியோ வேகமாக பரவியதைத் தொடர்ந்து சென்னை காவல்துறையினர் அவர் கடைசியாக எங்கெல்லாம் சென்றார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதற்கு தயாரிப்பு நிறுவனம் பல்வேறு யுத்திகளை கையாள்வது தமிழ் சினிமாவில் வாடிக்கையான ஒன்று. ஆனால், ஒரு நடிகையைக்காணவில்லை என வீடியோ தயாரித்து அதை உண்மை போல உலாவ விட்டுள்ளனர். பலரும் அந்த வீடியோ உண்மை என நம்பி ரெஸ்க்யூ சுனைனா என்கிற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அது குறித்து விசாரணை நடத்தும் அளவிற்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட ஒழுங்கு பிரச்சனை, குற்றத் தடுப்பு நடவடிக்கை, முக்கிய பிரமுகர் பந்தோபஸ்த் என ஏற்கனவே போலீசார் கடும் பணி சூழலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு பட ப்ரொமோஷன் வீடியோவால் இரண்டு நாட்களாக போலீசார் அது குறித்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இது காவலர்கள் மத்தியில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.