ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெமினி கணேசன் பின்னர் மனம் போல மாங்கல்யம் என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிக்க தமிழ் சினிமாவில் அவருக்கென தனி ரசிகர் கூட்டம் உருவானது. எம் ஜி ஆருக்கும், சிவாஜி கணேசனுக்கும் தத்துவ பாடல்களும், அறிவுரை கூறும் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் ஜெமினி கணேசனுக்கு காதல் பாடல்கள் பெருமளவு கை கொடுத்தது.
நடிகை சாவித்திரியை காதலித்து மணந்து ஜெமினி கணேசன் மேலும் சில திருமணங்கள் செய்து சர்ச்சைகளில் சிக்கினார். தனது வாழ்நாளின் இறுதிவரை நடித்து வந்த ஜெமினி கணேசன், வாழ்வின் இறுதிக் காலத்தில் நடித்த மேட்டுக்குடி, அவ்வை சண்முகி ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நகைச்சுவை நடிப்பில் புகழ்பெற்று விளங்கினார்.