மாமனிதன் படத்தில் நடித்துள்ள காயத்ரிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டு உள்ளது.
2/ 8
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி, காயத்ரி ஜோடியாக நடித்துள்ள 'மாமனிதன்' படம் கடந்த மே மாதம் திரைக்கு வந்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
3/ 8
தென்மேற்கு பருவக்காற்று, இடம் பொருள் ஏவல், தர்மதுரை படங்களை தொடர்ந்து விஜய்சேதுபதி - இயக்குநர் சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகிய திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படத்தை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருந்தார்.
4/ 8
அத்துடன் தன்னுடைய தந்தை இளையராஜாவுடன் சேர்ந்து படத்திற்கான இசையும் அமைத்திருந்தார்.இந்த படத்தில் 2 குழந்தைகளின் தாயாக நடிகை காயத்ரி மிக இயல்பாக நடித்திருந்தார்.
5/ 8
இதில் ஜோக்கர் படம் மூலம் பிரபலமான குருசோமசுந்தாமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மாமனிதன் படம் எதிர்பாராத வகையில் பல விருதுகளை வாங்கி குவித்து வருகிறது.
6/ 8
சமீபத்தில்ஈரான் நாட்டில் உள்ள அபதான் என்ற தீவில் உள்ள மூளிங் திணப்பட கல்லூரி திரைப் பட விழாவில் மாமனிதன் திரையிடப்பட்டு விஜய் சேதுபதிக்கு 2022ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் என்ற விருதை வழங்கி கவுரவித்தனர்.
7/ 8
இந்த நிலையில் தற்போது ஜெய்ப்பூரில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் மாமனிதன், கார்கி, இரவின் நிழல், விசித்திரன் உள்ளிட்ட பல தமிழ் படங்கள் திரையிடப்பட்டன.
8/ 8
இதில் மாமனிதன் படத்தில் நடித்துள்ள காயத்ரிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டு உள்ளது. விருது பெற்ற காயத்ரிக்கு இயக்குனர் சீனுராம சாமி உள்ளிட்ட திணரயுலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.