முகப்பு » புகைப்பட செய்தி » பொழுதுபோக்கு » Puthandu 2023: தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக தியேட்டரில் வெளியாகும் படங்கள்!

Puthandu 2023: தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக தியேட்டரில் வெளியாகும் படங்கள்!

Puthandu 2023: ராகவா லாரன்ஸின் 'ருத்ரன்' படம் முதல் சமந்தாவின் 'சாகுந்தலம்'படம் வரை தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் ஒரு தொகுப்பு.

  • News18
  • 16

    Puthandu 2023: தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக தியேட்டரில் வெளியாகும் படங்கள்!

    நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன். இப்படத்தின் மூலம் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது.

    MORE
    GALLERIES

  • 26

    Puthandu 2023: தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக தியேட்டரில் வெளியாகும் படங்கள்!

    லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ள சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல் நடிகர்கள் கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு படம் வெளியாகிறது.

    MORE
    GALLERIES

  • 36

    Puthandu 2023: தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக தியேட்டரில் வெளியாகும் படங்கள்!

    தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது, பல சுவாரஸ்யமான படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அவற்றில் ஒன்று இசைஞானி இளையராஜாவின் இசையில், பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் 'தமிழரசன்'. இந்தப் படம் 2020-ஆம் ஆண்டின் முற்பகுதியில் பெரிய திரைகளில் வரவிருந்தது. ஆனால் கோவிட் தொற்றுநோய் காரணமாக தள்ளிப்போனது. இந்நிலையில் தற்போது, தமிழரசன் படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

    MORE
    GALLERIES

  • 46

    Puthandu 2023: தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக தியேட்டரில் வெளியாகும் படங்கள்!

    தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான பாரதிராஜா தற்போது திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அருள்நிதியுடன் திருவின் குரல் படத்தில் நடித்துள்ளார். லைகா இந்தப் படத்தை தயாரித்துள்ளது. படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஷ் பிரபு என்பவர் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வித்தியாசமான கதை அம்சத்துடன் உருவாக்கியுள்ளது எனவும் இதில் பாரதிராஜாவின் கதாபாத்திரம் பேசப்படும் எனவும் படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

    MORE
    GALLERIES

  • 56

    Puthandu 2023: தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக தியேட்டரில் வெளியாகும் படங்கள்!

    இயக்குனர் அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'ரிப்பப்பரி'.மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஆரத்தி பொடி, காவ்யா அறிவுமணி, ஶ்ரீனி, நோபிள் ஜேம்ஸ், மாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏப்ரல் 14ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 66

    Puthandu 2023: தமிழ்ப் புத்தாண்டு ஸ்பெஷலாக தியேட்டரில் வெளியாகும் படங்கள்!

    சமந்தா நடிப்பில் தெலுங்கு இயக்குநர் குணசேகரன் இயக்கியிருக்கும் சாகுந்தலம் திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தில் துஷ்யந்தனாக தேவ் மோகன், துருவ மகரிஷியாக மோகன் பாபு, அனுசுயாவாக அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், கௌதமி, மதுபாலா எனப் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியிடுகின்றனர். மகாபாரதத்தில் இடம் பெறும் கதாபாத்திரங்களை எடுத்து சாகுந்தலம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். இந்தப் படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES