தீபாவளிக்கு அண்ணாத்த, எனிமி, ஹாலிவுட்டின் இட்டர்னல்ஸ், இந்தி சூரியவான்ஷி ஆகிய முக்கியப் படங்கள் வெளியாகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தப் பட்டியலில் அண்ணாத்தே படம் முதலிடத்தில் உள்ளது. அண்ணாத்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி 43 நிமிடங்கள். படத்துக்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அண்ணாத்தக்கு அடுத்து அதிக எதிர்பார்ப்பு உள்ள படம் எனிமி. விஷால், ஆர்யா நாயகன், வில்லனாக நடித்திருக்கும் படம். எனிமியின் ரன்னிங் டைம் 2 மணி 39 நிமிடங்கள். தணிக்கைக்குழு படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. அக்ஷய் குமார் நடிப்பில், ரோஹித் ஷெட்டி இயக்கியிருக்கும் சூரியவான்ஷி திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகிறது. இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி 25 நிமிடங்கள். படத்துக்கு தணிக்கைக்குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோ படமான இட்டர்னல்ஸ் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5 வெளியாகிறது. இந்தப் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி 35 நிமிடங்கள். தணிக்கைக்குழு இதற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.