முகப்பு » புகைப்பட செய்தி » பத்து தல முதல் விடுதலை வரை.. களைகட்டும் திரையரங்குகள்... இன்று ரிலீசான மாஸ் படங்கள்!

பத்து தல முதல் விடுதலை வரை.. களைகட்டும் திரையரங்குகள்... இன்று ரிலீசான மாஸ் படங்கள்!

இன்று திரையரங்குகளில் சிம்புவின் பத்து தல மற்றும் சூரியின் விடுதலை உட்பட பல படங்கள் வெளியாகியுள்ளது.

 • News18
 • 14

  பத்து தல முதல் விடுதலை வரை.. களைகட்டும் திரையரங்குகள்... இன்று ரிலீசான மாஸ் படங்கள்!

  நடிகர் சிலம்பரசன் கன்னடத்தில் வெளியாகி வெற்றியடைந்த முஃப்டி என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துள்ளார். அதில் அவருடன் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கும் அந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பத்து தல படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிம்புவின் மாநாடு படம் போல பத்து தல திரைப்படமும் வெற்றியடையும் எனப்படக் குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 24

  பத்து தல முதல் விடுதலை வரை.. களைகட்டும் திரையரங்குகள்... இன்று ரிலீசான மாஸ் படங்கள்!

  தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை. இந்தப் படத்தில் நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர்  இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தின் முதல் பாகம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 2 பாகங்களாக உருவாகியுள்ள இந்த படம் விசாரணை, அசுரன் போன்று மிகவும் அழுத்தமான திரைப்படமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 34

  பத்து தல முதல் விடுதலை வரை.. களைகட்டும் திரையரங்குகள்... இன்று ரிலீசான மாஸ் படங்கள்!

  வெப்பம், நான் ஈ, ஆஹா கல்யாணம் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தெலுங்கு நடிகர் நானி. நேச்சுரல் ஸ்டார் என தெலுங்கு ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் படத்துக்கு படம் வித்தியாசமான முயற்சிகளால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். தற்போது, தெலுங்கில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள தசரா படத்தில் நானி நடித்துள்ளார். இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று இந்திய அளவில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் உடன் சமுத்திரக்கனி, சாய் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 44

  பத்து தல முதல் விடுதலை வரை.. களைகட்டும் திரையரங்குகள்... இன்று ரிலீசான மாஸ் படங்கள்!

  லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படம் இந்தியில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக்காகி உள்ளது. இந்தப் படம் 3டி-யில் உருவாகி உள்ளது. இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். அவரே இந்தப் படத்தை இயக்கியும் உள்ளார்.

  MORE
  GALLERIES