இந்த நிலையில் புற்றுநோய் பாதிப்பால் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி அவதியுற்றார். கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக அவருக்கு கடுமையான நோய் தாக்குதல் இருந்தது. அதற்கு அவர் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் நள்ளிரவு அவர் காலமானார். அவரின் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்படவுள்ளது. இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.