கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான எம்.எஸ்.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமானவர் தீஷா பதானி. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அவரது 42வது படமாக உருவாகிவரும் படத்தில் தீஷா நடித்துவருகிறார். மேலும் அமிதாப் பச்சன் , பிரபாஸ் இணைந்து நடிக்கும் புரொஜெக்ட் கே படத்துக்கும் தீஷா தான் ஹீரோயின். சமீபத்தில் திருமணமான சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இதன் ஒரு பகுதியாக நிகழ்வில் கலந்துகொண்ட தீஷா பதானியின் உடை சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. திருமணத்துக்கு இப்படியாக வருவீர்கள் என ஒரு ரசிகர் கமெண்ட் செய்ய, மற்றொருவர் தீஷா பெல்லி டான்சர் போல வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதில் உச்சகட்டமாக ஒரு ரசிகர், தீஷா பதானி திருமண வரவேற்புக்கு வந்தாரா அல்லது கிளப்புக்கு வந்தாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.