இந்த போஸ்டரில் விடாமுயற்சி என்ற தலைப்பில் ற் எழுத்துக்கு மேல் கூகுள் மேப்பில் உள்ளது அடையாளக் குறியீடு இருக்கிறது. இதனையடுத்து இந்தப் படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என ரசிகர்கள் டீகோட் செய்து வருகின்றனர். மேலும் போஸ்டரில் சுழல் இடம்பெற்றுள்ளதால் ஒரு கப்பல் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகலாம் என்றும் சொல்லப்படுகிறது