திரையரங்குகளுக்கு வராமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ள பிளட் மணி திரைப்படமும் நேரடியாக ஸீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
2/ 7
நெட்பிளிக்ஸ், அமேசான், டிஸ்னி + ஹாட் ஸ்டார், சோனிலிவ் போன்ற தளங்கள் பிரமாண்ட படங்களை குறி வைக்கையில் சின்ன பட்ஜெட் படங்களின் மூலம் ஸீ 5 தொடர்ந்து கவனம் ஈர்க்கிறது.
3/ 7
மலேஷியா டூ அம்னிஷியா, விநோதய சித்தம், டிக்கிலோனா படங்களை வெளியிட்ட ஸீ 5 அடுத்து பிளட் மணியை வெளியிடுகிறது.
4/ 7
படத்தின் பெயரைப் பார்த்து சந்தேகிக்க வேண்டாம். தமிழ்ப் படம்தான் இது. ப்ரியா பவானி சங்கர் பத்திரிகையாளராக இதில் பிரதான வேடம் ஏற்றுள்ளார்.
5/ 7
அவருடன் கிஷோர், ஷிரிஷ், சுப்பு பஞ்சு, வினோத் சாகர், ஸ்ரீலேகா ராஜேந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். சர்ஜுன் படத்தை இயக்கியுள்ளார். வசனம் சங்கர் தாஸ்.
6/ 7
படம் குறித்து பேசிய ப்ரியா பவானி சங்கர், பத்திரிகையாளராக வாழ்க்கையை தொடங்கிய நான் இந்தப் படத்தில் பத்திரிகையாளராகவே நடித்திருக்கிறேன். ஆச்சரியங்களும், அதிசயங்களும் நிறைந்த அற்புதமான சஸ்பென்ஸ் ட்ராமாவாக இந்தப் படம் இருக்கும் என்றார்.
7/ 7
பிளட் மணி திரைப்படத்தை டிசம்பர் 24 கிறிஸ்மஸை முன்னிட்டு ஸீ 5 வெளியிடுகிறது.