விசு, லட்சுமி, ரகுவரன், கமலா காமேஷ் உள்ளிட்டோர் நடித்த சம்சாரம் அது மின்சாரம். வசந்த் இயக்கத்தில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ராதிகா நடித்த கேளடி கண்மணி. மாதவன், ஜோதிகா நடிப்பில் வெளியான டும் டும் டும். விக்ரமன் இயக்கத்தில் சூர்யா, சினேகா நடித்த உன்னை நினைத்து. ரஜினிகாந்த், அமலா, கே.ஆர்.விஜயா உள்ளிட்டோர் நடித்த வேலைக்காரன். ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா, வடிவேலு நடித்த காதலன். விஜய், ரீமா சென், ஜெய் உள்ளிட்டோர் நடித்த பகவதி. பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி, பிரபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்டோர் நடித்த பசும்பொன். ரஜினிகாந்த், மீனா, சரத்பாபு நடித்த முத்து. சரத்குமார், சிம்ரன், வடிவேலு நடித்த அரசு ஆகியப் படங்களை அமேசான் பிரைமில் பார்த்து மகிழலாம்.