நடிகர் கார்த்திக் குமார், நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசன் திருமணம் சென்னையில் நடந்தது.
2/ 11
இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
3/ 11
கார்த்திக் குமார் கண்ட நாள் முதல், வெப்பம், யாரடி நீ மோகினி, அலைபாயுதே உள்பட பல படங்களில் நடித்தவர்.
4/ 11
நாடகத்திலிருந்து வந்த கார்த்திக், இப்போதும் நாடகம் மீது காதல் கொண்டிருப்பவர். ஸ்டேன்ட் அப் காமெடியன்.
5/ 11
இத்தனை திறமைகள் இருந்தும் தமிழ் சினிமா அவரை பாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளையாகவே பயன்படுத்தியது.
6/ 11
ஒருகட்டத்தில் சினிமாவே வேண்டாம் என ஸ்டேன்ட் அப் காமெடியில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவருக்கும் நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசனுக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.
7/ 11
இது இரு வீட்டு சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம். அம்ருதா பிரபலமான சித்தி குறும்படத்தில் நடித்தவர்.
8/ 11
வைபவ் நடித்த மேயாத மான், கார்த்தியின் தேவ் படங்களிலும் நடித்துள்ளார். ஒரு வெப் தொடரிலும் நடித்துள்ளார்.
9/ 11
இவர்களின் திருமணத்துக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக நடிகைகள் வினோதினி, லட்சுமி ப்ரியா போன்றவர்கள் சமூகவலைத்தளத்தில் இந்த புதுத்தம்பதியை வாழ்த்தியுள்ளனர்.
10/ 11
கார்த்திக் குமார் பின்னணி பாடகி சுசித்ராவை முன்பு திருமணம் செய்து கருத்து வேறுபாட்டால் அவரை விவாகரத்து செய்து கொண்டார்.
11/ 11
"இந்த மனிதன் கார்த்திக்குக்கு ஒரு பெரிய பிரேக் தேவைப்பட்டது. அது அம்ருதா மூலம் கிடைத்துள்ளது" என வினோதினி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இதையே பலரும் பல்வேறு வார்த்தைகளில் கூறியுள்ளனர்.