ஈரமான ரோஜாவே கேப்ரியெல்லாவின் பாங்காக் வெக்கேஷன் புகைப்படங்கள் இதோ.. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் காவியா கதாபாத்திரத்தில் கேப்ரியெல்லா நடித்து வருகிறார். கேப்ரியெல்லா சொந்தமாக யூடியூப் சேனலும் வைத்துள்ளார். அதில் பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். கேப்ரியெல்லா விதவிதமாக உடை அணிந்து புகைப்படங்களை பதிவிடுவார். கேப்ரியெல்லா தற்போது பாங்காக் வெக்கேஷனிற்காக சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். பர்பிள் நிற ஷர்ட் மற்றும் ஸ்கர்ட் அணிந்து க்யூட்டான லுக்கில் கேப்ரியெல்லா. கேப்ரியெல்லா பதிவிட்ட படங்கள் லைக்ஸை குவித்து வருகிறது.