சீதா ராமம் நாளை வெளியாகவுள்ள நிலையில், மீண்டும் அரபு நாடு சென்சார் போர்டுகளுக்கு படக்குழுவினர் விண்ணப்பித்துள்ளனர். மத உணர்வுகளை சீதா ராமம் புண்படுத்துவதாக கூறி அரபு நாடுகள் சீதா ராமம் படத்திற்கு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. முன்பு வெளியான துல்கல் சல்மானின் குரூப் படத்திற்கும் வளைகுடா நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருந்தது. ரொமான்டிக் டிராமா ஜேனரில் சீதா ராமம் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ராணுவ அதிகாரியாக ராம் என்ற கேரக்டரில் துல்கர் நடித்துள்ளார். சீதாவாக மிருனால் தாகூரும், ஆஃப்ரினாக ராஷ்மிக மந்தனாவும் படத்தில் நடித்துள்ளார்கள். படம் நாளை வெளியாவதையொட்டி கடந்த சில வாரங்களாக படக்குழுவினர் தீவிர புரொமோஷனில் ஈடுபட்டிருந்தனர். சீதா ராமம் படத்தில் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், பூமிகா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளார்கள். அஸ்வினி தத் தயாரித்துள்ள இந்த படத்தை ஹனு ராகவபுதி இயக்கியுள்ளார். விஷால் சந்திர சேகர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.