'சுப்' படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்த துல்கர் சல்மான் தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதை வென்றுள்ளார். சுவாரஸ்யமாக இது இந்தியில் துல்கர் சல்மான் பெறும் முதல் விருதும் கூட. விருது பெற்றதையடுத்து, துல்கர் சல்மான் தனது சமூக ஊடகங்களில் ‘சுப்’ இயக்குனர் ஆர் பால்கிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது ஸ்பெஷலானது. இந்தியில் எனக்குக் கிடைத்த முதல் விருது. எதிர்மறையான பாத்திரத்தில் சிறந்த நடிகருக்காக நான் பெற்ற முதல் விருது. இந்த மரியாதைக்காக தாதாசாகேப் பால்கே விருது குழுவின் நடுவர் மன்றத்திற்கு மிக்க நன்றி” எனத் தெரிவித்திருக்கிறார் துல்கர் சல்மான். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.