மன்னனில் இன்னொரு சுவாரஸியம், ரஜினி இதில் வரும் அடிக்குது குளிரு பாடலின் இடையே குரல் கொடுத்திருப்பார். முதலிரவு அன்று விஜயசாந்தி ரஜினியை கிக் ஏற்றி பாடுகிற பாடல். அதன் நடுவில் அது சரி அதுரி.. ரொம்ப சரி ரொம்ப சரி... என்று குரல் கொடுத்திருப்பார். இரண்டாவது சரணத்தை அவரே பாடுவார். முல்லைப் பூங்கொடி கொம்பைத் தேடுது... கொம்பைப் போல என் அன்பைத் தேடுது... கட்டித் தங்கம் மேனி... கட்டழகு ராணி... தொட்டுப் பார்க்கத்தானே... கட்டில் பக்கம் வா நீ...என்று பாடுவார். இந்த மாதிரி ரிஸ்க்கான சமாச்சாரங்களை இளையராஜா தவிர்த்து யாராலும் செய்ய முடியாது. ரஜினி பாடிய (?) ஒரே பாடல் இதுதான்.