ஸ்டுடியோவுக்குள் முடங்கிக் கிடந்த திரையுலகை வெளியுலகுக்கு அழைத்து வந்த திரைப்படம் இது. இதன் பிறகுதான் இயக்குநர்கள் கேமராவுடன் புழுதிபடிந்த தெருக்களில் இறங்கினர். அதற்கு முன் வெளிப்புற படப்பிடிப்பே இல்லையா என்று கேட்டால் இருந்தது, ஆனால், முழுக்க மக்கள் மத்தியிலேயே ஒரு படத்தை எடுத்து வெற்றி பெற முடியும் என நம்பிக்கை அளித்தது 16 வயதினிலே.
1975 இல் கமல் நடிப்பில் வெளியான படம் ஆயிரத்தில் ஒருத்தி. டைட்டிலில் வரும் அந்த ஆயிரத்தில் ஒருத்தி கே.ஆர்.விஜயா. அவருக்கு அடுத்து முக்கியத்துவம் சுஜாதாவுக்கு. அதன் பிறகு சுதாகர், பாலாஜி. இவர்களுக்குப் பிறகே கமல். படத்தின் டைட்டிலில்கூட கமலின் பெயர் கே.ஆர்.விஜயா, பாலாஜி, சுதாகர் மூவருக்கும் பிறகுதான் வரும். அந்தப் படத்தில் நடிக்க கமலுக்கு 17,000 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.
பாரதிராஜா 1977 இல் 16 வயதினிலே படத்தை இயக்க முடிவான போது சப்பாணி வேடத்தில் கமலை நடிக்க வைப்பது என முடிவு செய்தார். ஆயிரத்தில் ஒருத்தி படத்துக்கு 17,000 ரூபாய் சம்பளம் வாங்கினார். இரண்டாயிரம் குறைத்து பதினைந்தாயிரத்துக்கு அவரை ஒப்பந்தம் செய்யலாம் என பாரதிராஜாவும், சித்ரா லட்சுமணனும் கமலைப் பார்க்க போயிருக்கிறார்கள்.
படத்தின் மொத்த பட்ஜெட்டே நாலே முக்கால் லட்சம்தான். இதில் கமலுக்கு முப்பதாயிரம் தந்தால் கடடுப்படியாகுமா? சப்பாணி வேடத்தில் சிவகுமாரை நடிக்க வைக்கலாம் என சித்ரா லட்சுமணன் யோசனை சொல்லியிருக்கிறார். அதனை பாரதிராஜா உடனே மறுத்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்துக்கு அவர் மனதில் இருந்த ஒரேயொருவர் கமல் மட்டுமே.
இது குறித்து ஸ்ரீதேவி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். ரஜினி ஸ்ரீதேவியின் அம்மாவுடன் படப்பிடிப்புதளத்தில் சகஜமாக உரையாடுவதுண்டு. அப்போது அவர், கமலைப் போல் முப்பதாயிரம் சம்பளம் வாங்குவதுதான் தன்னுடைய லட்சியம் என கூறியிருக்கிறார். காலம் விசித்திரமானது. ஒருகட்டத்தில் கமலைவிட அதிக சம்பளம் வாங்குகிறவராக மட்டுமின்றி இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினி மாறினார்.