நடிகை திவ்யபாரதி மாலத்தீவு விடுமுறையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான பேச்சிலர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் திவ்ய பாரதி இப்படத்தில் அவர் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்து இருந்தார். அந்தப் படத்தில் சுப்பு என்ற மார்டன் பெண்ணாக நடித்திருந்தார் திவ்யபாரதி. முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தார். இதையடுத்து தற்போது அவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது மதில் மேல் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார் திவ்யபாரதி. இந்தப் படத்தில் பிக் பாஸ் முகென் ராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். படங்களில் பிஸியாக நடித்து வரும் திவ்யபாரதி, தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். நடிகைகள் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வது சமீபத்தில் வழக்கமாகி வருகிறது. அந்த வகையில் திவ்யபாரதி சுற்றுலா சென்று, பிகினி உடையில் படங்கள் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.