அன்று திரையரங்கில் அண்ணாத்த, எனிமி படங்கள் வெளியாகின்றன. திரையரங்குக்கு செல்ல விருப்பமில்லை, குடும்பத்துடன் வீட்டிலிருந்தே தீபாவளி கொண்டாட நினைப்பவர்களுக்காக டிஸ்னி + ஹாட் ஸ்டார் வெளியிடும் படம் எம்ஜிஆர் மகன்.
2/ 8
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம் நகைச்சுவையும், சென்டிமெண்டும், காதலும் கலந்து இயக்கியிருக்கும் படம்தான் எம்ஜிஆர் மகன்.
3/ 8
முதலில் இந்தப் படத்தை திரையரங்கில் வெளியிடுவதாகத்தான் இருந்தனர். முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இறுதியில், இருக்கிற நெருக்கடியில் திரையரங்குக்கு போய் நசுங்குவானேன் என்று ஓடிடிக்கு படத்தை விற்றுவிட்டனர்.
4/ 8
டிஸ்னி + ஹாட் ஸ்டார் நாகரிகமான தொகைக்கு எம்ஜிஆர் மகனை வாங்கியுள்ளது. தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 நாளை படத்தை வெளியிடுகின்றனர்.
5/ 8
சசிகுமார் நாயகனாகவும், மிருணாளினி ரவி நாயகியாகவும் நடித்துள்ளனர். சத்யராஜ் சசிகுமாரின் தந்தையாக வருகிறார்.
6/ 8
படத்தில் சசிகுமாரும், அவரது தந்தையாக வரும் சத்யராஜும் ஒருவர் மீது ஒருவர் பகையுடன் இருப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணமும், தீர்வும்தான் படமாம்.
7/ 8
சமுத்திரக்கனி முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். பழ கருப்பையா, சரண்யா பொன்வண்ணன், மொட்ட ராஜேந்திரன், சிங்கம் புலி ஆகியோரும் நடித்துள்ளனர்.
8/ 8
குடும்பத்துடன் பார்க்கக்கூடிய குடும்ப சென்டிமெண்ட் படம் என்பதால், தீபாவளியை குடும்பத்துடன் வீட்டில் கொண்டாட நினைப்பவர்களுக்கு எம்ஜிஆர் மகன் நல்ல தேர்வாக இருக்கும்.