அடங்காதே படத்தை இயக்கிய சண்முகம் முத்துசாமியின் புதிய படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தொடங்கி வைத்தார்.
2/ 8
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் கடந்த 2016-ல் தொடங்கப்பட்ட அடங்காதே திரைப்படம் பல்வேறு காரணங்களால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
3/ 8
இந்நிலையில் அடுத்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார் சண்முகம் முத்துசாமி. இதன் தொடக்க விழா சென்னையில் நடந்தது.
4/ 8
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சண்முகம் முத்துசாமி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட படக்குழுவினரும், வெற்றிமாறன், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற திரையுலகினரும் கலந்து கொண்டனர். வெற்றிமாறன் கேமராவை இயக்கி படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
5/ 8
எஸ்பி சினிமாஸ் மற்றும் தேர்ட் ஐ என்டர்டெயின்மெண்ட் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கின்றன. அவர்களின் 5 வது தயாரிப்பாக இந்தப் படம் உருவாகிறது.
6/ 8
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அதுல்யா ரவி நாயகியாக நடிக்கிறார். யோகி பாபு, கருணாஸ், அமீர் உள்ளிட்டவர்களும் படத்தில் நடிக்க உள்ளனர்.
7/ 8
கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தின் தொடக்க விழாவில் அவரும் கலந்து கொண்டார். இதன் படப்பிடிப்பு சென்னையில் வரும் 27 ஆம் தேதி முறைப்படி தொடங்குகிறது.
8/ 8
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சமூகவலைத்தளத்தில் நன்றியை தெரிவித்துள்ளார் இயக்குனர் சண்முகம் முத்துசாமி.