இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் சீரியலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
2/ 8
இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகங்களைக் கொண்டவர் எஸ்.ஏ.சந்திர சேகர்.
3/ 8
1981-ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானார்.
4/ 8
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
5/ 8
எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கிய பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன.
6/ 8
இந்நிலையில் அவர் சீரியலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
7/ 8
ராதிகா சரத்குமாரின் ராடன் நிறுவனம் விசுவின் சம்சாரம் அது மின்சாரம் படத்தை சீரியலாக தயாரிக்கவிருப்பதாகவும், அதில் விசு கதாபாத்திரத்தில் எஸ்.ஏ.சி நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
8/ 8
கிழக்கு வாசல் என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்த சீரியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18
சீரியலில் நடிக்க வரும் எஸ்.ஏ.சந்திர சேகர்?