முகப்பு » புகைப்பட செய்தி » நடிகர் சுதீப்புக்கு வந்த அந்தரங்க வீடியோ மிரட்டல்... நெருங்கிய நண்பர் கைது.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

நடிகர் சுதீப்புக்கு வந்த அந்தரங்க வீடியோ மிரட்டல்... நெருங்கிய நண்பர் கைது.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

நடிகர் சுதீப்பின் அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் - இயக்குநர் மோதல் பின்னணி என்ன?

 • 15

  நடிகர் சுதீப்புக்கு வந்த அந்தரங்க வீடியோ மிரட்டல்... நெருங்கிய நண்பர் கைது.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

  கன்னட திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர், கிச்சா சுதீப். நான் ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தலைகாட்டி, நம்மூரிலும் தனி ரசிகர் பட்டாளத்தையே சம்பாதித்தார். கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியான பின்னர், ஏப்ரல் முதல் வாரத்தில் நடிகர் சுதீப், அம்மாநில கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமாரைச் சந்தித்தார்.
  தொடர்ந்து கர்நாடக மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மையையும் சுதீப் சந்தித்துப் பேசினார்.

  MORE
  GALLERIES

 • 25

  நடிகர் சுதீப்புக்கு வந்த அந்தரங்க வீடியோ மிரட்டல்... நெருங்கிய நண்பர் கைது.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

  அதன் பின்னர், நடிகர் சுதீப்பின் மீதான அரசியல் எதிர்பார்ப்புகள், அவரது ரசிகர்கள் மத்தியில் ஊற்றாகப் பெருக்கெடுக்க வைத்தது. அப்போது கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார், சுதீப். கூடவே, பாஜகவில் முக்கிய பொறுப்பில் சுதீப், சேரப்போவதாகவும் தகவல் வெளியானது.

  MORE
  GALLERIES

 • 35

  நடிகர் சுதீப்புக்கு வந்த அந்தரங்க வீடியோ மிரட்டல்... நெருங்கிய நண்பர் கைது.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

  அப்போதுதான், நடிகர் சுதீப்பிற்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில், நடிகர் சுதீப் பாஜகவில் சேரக்கூடாது என்றும், அப்படி சேர்ந்தால் சுதீப்பின் அந்தரங்க வீடியோக்கள், இணையத்தில் வெளியிட நேரிடும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. அச்செய்தி கர்நாடகம் முழுக்க பரவி, சலசலப்பை ஏற்படுத்தியது. தனக்கு வந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக, பெங்களூரு போலீஸில் நடிகர் சுதீப் புகாரளித்தார்.

  MORE
  GALLERIES

 • 45

  நடிகர் சுதீப்புக்கு வந்த அந்தரங்க வீடியோ மிரட்டல்... நெருங்கிய நண்பர் கைது.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

  அது தொடர்பான விசாரணையில், சுதீப்பின் நெருங்கிய நண்பரும், திரைப்பட இயக்குநருமான ரமேஷ் கிட்டியை பெங்களூரு போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். ரமேஷ் கிட்டி சுதீப்பின் அறக்கட்டளை நிர்வாகியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், நடிகர் சுதீப்பிற்கும் , ரமேஷ் கிட்டிக்கும் இடையே அறக்கட்டளை நிதியை கையாள்வதில் பிரச்சனை இருந்துள்ளது. அறக்கட்டளையில், தான் 2 கோடி ரூபாய் முதலீடு செய்ததாகவும், ஆனால் சுதீப் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் இயக்குநர் ரமேஷ் கிட்டி போலீஸ் தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 55

  நடிகர் சுதீப்புக்கு வந்த அந்தரங்க வீடியோ மிரட்டல்... நெருங்கிய நண்பர் கைது.. அதிர்ச்சியில் திரையுலகம்..!

  அதனால்தான், நண்பர் சுதீப்பிற்கு திட்டமிட்டு மிரட்டல் கடிதம் அனுப்பியதாக ரமேஷ் கிட்டி வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த நிலையில் ரமேஷ் கிட்டியிடம் தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அந்தரப் புகைப்படங்கள் வெளியிடப்படும் என நடிகர் சுதீப்பிற்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய விவகாரத்தில், சுதீப்பின் நெருங்கிய நண்பரே சிக்கியிருப்பது கர்நாடக திரைத்துறையில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

  MORE
  GALLERIES