பிரான்ஸில் நடந்து வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துக் கொண்டார். அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குநர் பா.ரஞ்சித். அதன் பின்னர் மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை ஆகியப் படங்களை இயக்கினார். அதோடு நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் பிரான்ஸில் நடந்து வரும் கேன்ஸ் திரைப்படவிழாவில் ரஞ்சித் கலந்துக் கொண்டார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தப் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.