வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் இயக்கியிருக்கும் திரைப்படம் செல்பி. ஜிவி பிரகாஷ், கௌதம் வாசுதேவ மேனன் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜிவி பிரகாஷ், இயக்குனர்கள் மதிமாறன், வெற்றிமாறன், மிஷ்கின், சுப்பிரமணியம் சிவா, தயாரிப்பாளர் தாணு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்தப் பேச்சை குறிப்பிட்டிருக்கும் ப்ளூ சட்டை மாறன், 'கடந்த சில வாரங்களாக விமர்சகர்கள் எப்படி நாகரீகமாக பேச வேண்டுமென சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் யூட்யூப் சேனல்களில் பாடம் எடுத்த தம்பி ஆரி, ஆர்கே சுரேஷ், தயாரிப்பாளர் கே ராஜன் உள்ளிட்ட சில சினிமாக்காரர்கள் மிஷ்கினின் ஆபாச பேச்சுக்கு வாய் திறக்க மாட்டார்கள். நானாவது தனிப்பட்ட யூடியூப் சேனலில் பேசினேன் ஆனால் மிஷ்கின் மொத்த பத்திரிகையாளர்கள் முன்பு இப்படிப் பேசியுள்ளார்.