மிஷ்கின் முதல் கௌதம் கார்த்தி வரை பிரபலங்கள் சூழ நடைபெற்ற ஆர்.கே.சுரேஷ் மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சி!
இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் மற்றும் நடிகர் கௌதம் கார்த்திக் உடன் அரசியல் பிரபலங்களான அண்ணாமலை, கிருஷ்ணசாமி, அர்ஜூன் சம்பத் என பலர் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷின் மனைவிக்கு நடந்த வளைக்காப்பு நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் மற்றும் கௌதம் கார்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
2/ 8
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் ஆர்.கே.சுரேஷ். பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். அதோடு பலமொழி திரைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
3/ 8
பிசியான தயாரிப்பாளராக இருக்கும் ஆர்.கே.சுரேஷ், பாலா இயக்கத்தில் வெளியான ‘தாரை தப்பட்டை’ படத்தின் நடிகராக உருவெடுத்தார். முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
4/ 8
இந்நிலையில் ஆர்.கே.சுரேஷிற்கும் தயாரிப்பாளர் மது என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணமானது.
5/ 8
இதையடுத்து கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரலில் ஆர்.கே.சுரேஷ் - மது தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தற்போது மது இரண்டாவது முறை கர்ப்பம் தரித்திருக்கிறார்.
6/ 8
இந்நிலையில் தனது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதையொட்டி வளைக்காப்பு நடத்தியுள்ளார் ஆர்.கே.சுரேஷ்.
7/ 8
இந்த நிகழ்ச்சியில் திரைப் பிரபலங்கள் மட்டுமின்றி அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
8/ 8
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.