முத்தையா இயக்கத்தில் கார்த்தி. அதிதி நடித்திருக்கும் விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில் படம் குறித்து பேசியுள்ளார் முத்தையா.
2/ 8
விருமன் என்பது கார்த்தியின் கதாபாத்திரப் பெயராக இருக்கும் என்றே அனைவரும் நினைத்திருந்தனர். முத்தையா அதற்கு மேலும் விளக்கம் அளித்துள்ளார்.
3/ 8
"விருமன் என்பது குல சாமியின் பெயர். தேனி பக்கம் விருமன் என்றால் பிரம்மன் என்று பொருள். அதுதான் இந்தப் படத்தின் கதைக்களம். என் எதிர்த்த வீட்டில் நடந்த சம்பவத்தையே படமாக்கியிருக்கிறேன்" என்றார் முத்தையா.
4/ 8
"வாழ்க்கையில் அனைவரும் தப்பு செய்வார்கள். அதை அப்பா, அம்மா, அக்கா, அண்ணன்னு யாராவது தட்டிக் கேட்கணும். அது நமக்கு நல்லது செய்யும். அப்படி நாம் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டும் அந்த உறவுதான் நல்ல உறவு.
5/ 8
இந்த மண்ணோட மனிதர்கள் முன்னாடி எப்படி இருந்தார்களோ இன்றைக்கும் அப்படியே இருக்கணும்னு விரும்புறவன்தான் விருமன்" என மேலும் அவர் கூறியுள்ளார்.முத்தையாவின் முந்தையப் படங்களைப் போல உறவுகள் சூழ இருப்பவன்தான் விருமன். அவர்களுக்கு ஒன்று என்றால் கொதித்து எழுகிறவன்.
6/ 8
இந்தப் படத்தில் கார்த்திதான் விருமன். அவர் தட்டிக் கேட்பது அவரது சொந்த தந்தையான பிரகாஷ்ராஜை. அவர் விருமனில் நெகடிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
7/ 8
விருமனுக்கு துணையாக நல்லது செய்யும் தாய்மாமன் வேடத்தில் ராஜ்கிரண் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது.அதிதியின் தேன்மொழி கதாபாத்திரமும் படத்தில் பேசப்படும் என்கிறது படக்குழு.
8/ 8
2டி என்டர்டெயின்மெண்ட் கார்த்தியை வைத்து இதற்கு முன் தயாரித்த கடைக்குட்டி சிங்கம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.அதேபோல் முத்தையா கார்த்தியை வைத்து இதற்கு முன் இயக்கிய கொம்பனும் பெரிய வெற்றியை பெற்றது. விருமனும் அதே அளவு வெற்றியை பெறும் என்பது படக்குழுவின் நம்பிக்கை.