பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர்கள் தேர்வு எப்படி இருந்தது என்று இயக்குநர் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
2/ 11
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இயக்குநர் மணிரத்னம் அதே பெயரில் படமாக்கி வருகிறார். அந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது.
3/ 11
அதில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ் - தெலுங்கு - இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
4/ 11
பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஷ்வர்யா ராய், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
5/ 11
படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
6/ 11
மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
7/ 11
இந்நிலையில் படத்தின் நடிகர்கள் தேர்வு குறித்து இயக்குநர் மணிரத்னம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
8/ 11
அதில், படத்தில் இந்த கதாப்பாத்திரத்திற்கு இந்த நடிகர் சரியாக இருப்பார் என்று நம் மனதில் தோன்றும்.
9/ 11
ஆனால் படம் முழுமையாக வெளியாகும் போது என்னுடைய இயக்கம் மட்டும் அல்லாமல் நடிகரின் அர்ப்பணிப்பும் அந்த கதாப்பாத்திரத்திற்கு முக்கியமானதாக உள்ளது.
10/ 11
அதனால், படப்பிடிப்பின் போது நடிகர்களுடன் பேசுகையில் என்னுடைய கதைக்கு மட்டும் நீங்கள் நடித்தால் அது போதாது. நடிக்கும் போது உங்களுக்குள் இருக்கும் வந்தியதேவன், குந்தவை வெளியே வரவேண்டும் என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.
11/ 11
ஆகையால் கதையுடன் நடிகர்கள் ஒன்றி நடிக்கும் போது படம் முழுமையடையும் என்றும் அதனைதான் பொன்னியின் செல்வன் படத்தில் செய்திருப்பதாகவும் மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
111
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர்கள் தேர்வு எப்படி இருந்தது - மணிரத்னம் விளக்கம்!