தொடர்ந்து மகேந்திரன் இயக்கத்தில் வெளியான உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, நண்டு ஆகிய படங்களும் எதார்த்த வாழ்வின் காட்சிகளை செல்லுலாய்டில் பூட்டி வெளியிட்டன. மேலும் தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு முன்னேற்றியதில் இயக்குநர் மகேந்திரனின் படங்களுக்கு என்றுமே தனி இடம் உண்டு.